Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் - சாதனை படைத்த அமெரிக்கர்..!

ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் – சாதனை படைத்த அமெரிக்கர்..!

சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘மினியன்ஸ்: ரைஸ் ஆப் க்ரு’ படத்தில் தொடங்கி ‘இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ வரை பலதரப்பட்ட படங்களையும் பார்த்துள்ளார்.

இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு 715 படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. அதனை சாக்ஸ்வோப் தற்போது முறியடித்துள்ளார்.

Recent News