Sunday, January 26, 2025
HomeLatest Newsஅவுஸ்ரேலியாவுக்கு படகில் பயணித்த 77 பேர் இன்றும் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகில் பயணித்த 77 பேர் இன்றும் கைது!

மட்டக்களப்பு – களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திர படகில் சட்டவிரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களுடன் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் இதன்போது மீட்டெடுத்த பொலிஸார், அவற்றை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recent News