Thursday, December 26, 2024
HomeLatest News71வது பிரபஞ்ச அழகிப்போட்டி - அமெரிக்க அழகி முதலிடம்!

71வது பிரபஞ்ச அழகிப்போட்டி – அமெரிக்க அழகி முதலிடம்!

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர்.வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட திவிதா ‘சோன் சிரியா’ உடையணிந்து வந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் 16 ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News