Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅயர்லாந்தில் குடியேற விரும்புபவர்களுக்கு 71 இலட்சம் ; அரசு அதிரடி அறிவிப்பு....!

அயர்லாந்தில் குடியேற விரும்புபவர்களுக்கு 71 இலட்சம் ; அரசு அதிரடி அறிவிப்பு….!

அயர்லாந்து நாட்டில் குடியேறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 71 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்பின் பெரும்பான்மைனோரின் முன்னுரிமைத் தெரிவாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளே காணப்படும்.
குறித்த நாடுகளில் குடியேறுவதற்கு அதிகளவு பணம் தேவைப்படுவதுடன் தொடர்ந்தும் அங்கு வாழ வேண்டுமாயின் அதிகளவான பணத்தை உழைக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது.

இந் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் சன நடமாட்டம் குறைவாக உள்ள தீவுகளில் மக்களைக் குடியேற்றும் நோக்கில் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றுடன் கடற்கரையோரப் பகுதிகளில் குடியேறுபவர்களுக்கு அடிப்படை மற்றும் தொழில் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிலையில் அயர்லாந்து நாட்டின் தீவுகளிலுள்ள கலாச்சாரம் , பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலை அனுபவித்து வாழ விரும்புவோர் எதிர்வரும் ஜீலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News