இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் எந்நேரமும் தமது ஹெட்ஃபோன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.
படிக்கும் போது ஆரம்பித்து படுக்கை அறையில் உறங்கும் போதுவரை இதன் பாவனை அதிகரித்து கொண்டே போகின்றது.
ஹெட்ஃபோன் பாவனையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் 60 நிமிடங்களுக்கு மேல் அணிவதால் காதுகளுக்கு ஆபத்து நிகழுகின்றது என்பது தான்.
இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
60 நிமிடங்களுக்கு மேல் ஹெட்ஃபோன் அணிந்திருந்தால் என்ன நடக்கும்?
ஹெட்ஃபோன்களை 60 நிமிடங்களுக்கு மேல் அணியும்போது இயற்கையான காற்றிலிருந்து உங்கள் காதுகள் மூடப்படுகின்றது.
இது 1 மணிநேரத்தில் காதுகளில் பாக்டீரியாக்கள் உற்பத்தியை 700 சதவீதம் வரை அதிகரிப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எமது செவிப்பறையில் பாக்டீரியாக்களின் வருகை அதிகரிப்பதால் காது வழி, காதுக்கேளாமை, காது நோய்தொற்று உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்படுகின்றது.
ஹெட்ஃபோன்கள் மூலமாக மூளைக்கு நேரடியாகச் செல்லும் அதிக ஒலியினால் மூளையின் நுண்ணிய தசைகளை பாதிக்கிறது. தொடர்ச்சியான ஹெட்ஃபோன் பயன்பாட்டால் வெர்டிகோ என்ற ஆபத்தான நோய் ஏற்படுகிறது.
ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
*காது வலி – ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் முதலிடத்தில் இருப்பது காது வலி ஆகும். ஹெட்ஃபோன்களில் இருந்து வரும் அளவுக்கு அதிகமான சத்தம் காதுகளைப் பாதிக்கும். காதின் வெளிப்பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது செவிப்பறையைப் பாதித்து காதில் தீவிரமான வலியை உண்டாக்கும்.
*காதில் நோய்த்தொற்று – ஹெட்ஃபோன்களினால் காதிற்குள் செல்லும் காற்று தடைப்பட்டு பல வகையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றது.
*மயக்கம் – மயக்கத்தை ஏற்படுத்தும். ஹெட்ஃபோன்களினால் அளவுக்கு அதிகமான சத்தத்தின் காரணமாக நமது காதின் வெளிப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு நமக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.
*கேட்கும் திறன் இழத்தல் – கேட்கும் திறன் செயல் இழப்பதற்கும் ஹெட்ஃபோன் பாவனையும் ஓர் முக்கிய காரணம் என்பது கவலைக்குறிய விடயம்.
ஹெட்ஃபோன்ளில் இருந்து காதிற்குள் செல்லும் அதிகமான சத்தம் காதின் மென்மையான உட்பகுதியை பாதிப்படையச் செய்யும். இது தொடரும் போது கேட்கும் திறனை இழக்க நேரிடும்.
ஹெட்ஃபோன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்ச்சியாக பாவிக்காமல் இடைவெளி விட்டு பாவியுங்கள்.
யாராவது பாவித்த ஹெட்ஃபோன்களை வாங்கினால் அவற்றை அணிவதற்கு முன்னர்ச் சுத்தம் செய்ய வேண்டும்.
ஹெட்ஃபோன்களை அதிகபட்ச ஒலியில் இசையை கேட்க வேண்டாம்.
காது வலியை உணரும் போது உடனே ஹெட்ஃபோன் பாவையை குறைக்கவும். அது மட்டும் இல்லை மருத்துவ ஆலோசனைகள் அவசியம் எடுத்துக் கொள்ளுஙகள்.