Thursday, January 16, 2025
HomeLatest Newsஇங்கிலாந்தின் ராணி எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு

இங்கிலாந்தின் ராணியாக இரண்டாம் எலிசபெத் முடி சூட்டப்பட்ட 70 ஆண்டு பவள விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது .

ராணி எலிசபெத் தங்கியுள்ள வின்ட்சர் கேஸ்ட்டில் மாளிகையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் பாண்ட் வாத்தியம் முழங்க எலிசபெத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . பின்னர் அவர் வண்ண மின் விளக்கு அலங்காரங்களை துவக்கி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் ராணி எலிசபெத்தின் பேரனான இளவரசர் வில்லியம் உள்ளிட்ட அரச குடும்பத்தை சேர்ந்த பலர் பங்கேற்று எலிசபெத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர் .

தொடர்ந்து , கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது . பக்கிங்காம் அரண்மனையின் மேலே பறந்த ஜெட் விமானங்கள் வண்ணங்களை தூவி வானை வர்ணஜாலமாக்கின . இதுமட்டுமின்றி ஏராளமான விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன .

இதனை பிரிட்டன் ராணி எலிசபெத் மட்டுமி ன்றி ஏராளமான மக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர் . இங்கிலாந்து அரச பரம்பரையில் தொடர்ந்து 70 ஆண்டு கால ராணி யாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத் ஆவார் .

இதனை கொண்டாடும் விதமாக நான்கு நாட்கள் லண்டனில் பல்வேறு லை நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளன . 96 வயதாகும் எலி சபெத் . மிக நீண்ட ஆண்டு கள் ராணியாக இருப்பவர் என்ற சாதனைக்கு சொந்த க்காரர் ஆவார்

Recent News