Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 70 வயது பெண்!!!

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 70 வயது பெண்!!!

ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் Gina Rinehart தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 40.6 பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைவிட அவரது சொத்து மதிப்பு இம்முறை 3.2 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.Financial Review’s வால் ஆஸ்திரேலியாவின் முன்னணி 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரமே இரும்பு தாதூ வியாபாரத்துறையில் கொடிகட்டி பறக்கும் Gina Rinehart முன்னணியில் உள்ளார்.

தனது சொத்துகளை பல்வகைப்படுத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் 70 வயதான தீவிரம் காட்டிவருகின்றார்.மேற்படி பட்டியலில் மெரிட்டன் நிறுவனத்தின் ஸ்தாபகர் Harry Triguboff இரண்டாவது இடத்தில் உள்ளார். 91 வயதான அவரின் சொத்து மதிப்பு 26.5 பில்லியன் டொலர்களாகும். கடந்த வருடத்தைவிட சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

Recent News