Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsமருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - அரசின் அதிரடி..!

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை – அரசின் அதிரடி..!

மருத்துவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்திருத்தத்தினை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.

அண்மையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதைப்பொருளுக்கு அடிமையானவருக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள அரசு, கேரளாவில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Recent News