Sunday, January 26, 2025
HomeLatest Newsமன்னார் கடல் மார்க்கமாக தமிழகம் செல்ல முயன்ற 7 பேர் கைது

மன்னார் கடல் மார்க்கமாக தமிழகம் செல்ல முயன்ற 7 பேர் கைது

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு 9.35 மணியளவில் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

மேலும், பெண் ஒருவர், சிறுவன், சிறுமி உள்ளடங்களாக 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

Recent News