Thursday, January 23, 2025
HomeLatest Newsதாமரை கோபுரம் திறக்கப்பட்டு மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருவாய்!

தாமரை கோபுரம் திறக்கப்பட்டு மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருவாய்!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் சனிக்கிழமை (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.

எவ்வாறாயினும், இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Recent News