Thursday, January 23, 2025
HomeLatest Newsதம்ஸ் அப் எமோஜி அனுப்பியவருக்கு 60 லட்சம் அபராதம் ; கனடா நீதிமன்று அதிரடி…..!

தம்ஸ் அப் எமோஜி அனுப்பியவருக்கு 60 லட்சம் அபராதம் ; கனடா நீதிமன்று அதிரடி…..!

செல்போனில் தம்ஸ் அப் எமோஜி அனுப்பியவருக்கு 60 லட்சம் அபராதம் விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வலைத்தளங்களில் பல்வேறு தகவல் தொடர்புகளின் போது உரைகளை நீண்டதாகவும் குறுகியதாகவும் தட்டச்சு செய்யாமல் உணர்வுகளை இலகுவாக வெளிப்படுத்த பல்வேறு எமோஜிக்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் சாதாரணமாக தம்ஸ் அப் எமோஜி அனுப்பியதற்காக விவசாயி ஒருவருக்கு 60 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டவிநோத சம்பவமொன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் சஸ்காட்செவானை சேர்ந்த கிறிஸ் ஆக்டர் என்ற விவசாயி பொருட்களை அளிக்கும் ஒப்பந்தம் தொடர்பில் தம்ஸ் அப் எமோஜியை அனுப்பியதாலே அவருக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒருவரின் கையெழுத்துக்கு சமனாக ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக்காட்டும் தம்ஸ் அப் எமோஜி செல்லுபடியாகும் என்பதை நீதிமன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2021 ம் ஆண்டு மார்ச் மாதமளவி்ல் விதைகளை விற்பனை செய்யும் நிறுவனமொன்றிற்கு 96 டொன் ஆளி விதைகளை வாங்கவுள்ளதாக சவுத் வெஸ்ட் டெர்மினவில் வசித்து வரும் விதைகளை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர் தன் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த வியாபாரிதனக்கு நவம்பர் மாதத்தில் குறித்த விதைகளை வழங்க வேண்டுமென ஒப்பந்தத்தை புகைப்படமாக தொலைபேசி மூலம் அனுப்பியுள்ளார் மீண்டும் வியாபாரி.ஒப்பந்தத்தை உறுதி செய்யும்படிவினாவிய போது தம்ஸ்அப் எமோஜியைப் பதிலுக்கு அனுப்பியுள்ளார்.

எனினும் குறித்த காலத்திற்குள் விதைகள் கிடைக்கப்பெறாமையால் இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது.குறித்த இமோஜியை அனுப்பியமையானது ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டதற்ான கையெழுத்தில்லையென விவசாயி கூறியதுடன் மேலும் ஒப்பந்தம் தனக்கு வந்துவிட்டது என்பதை தெரிவிக்கவே குறித்த குறியீட்டை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

இவ் விவகாரம் காரணமாக இருவரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் குறித்த விவசாயிக்கு 60 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது. ஒருவரின் அடையாளத்தை றுதிப்படுத்த கையொப்பம் பாரம்பரிய முறையாக இருப்பினும் எமோஜிக்கள் நவீன முறையில் குறித்த விடயத்தையே பிரதிபலிக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

Recent News