Saturday, January 25, 2025
HomeLatest Newsநாடு முழுவதும் மீளப்பெறப்படும் 6 வகை சாக்லெட்டுக்கள் - வெளியான காரணம்..!

நாடு முழுவதும் மீளப்பெறப்படும் 6 வகை சாக்லெட்டுக்கள் – வெளியான காரணம்..!

இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த சாக்லெட்களில் உண்டான பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் லிஸ்டீரியோ எனப்படும் பாக்டீரியா தொற்று அந்த 6 வகையான சாக்லெட்களால் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் கர்ப்பிணிகள், 65 வயதிற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டமையால் , ஆறு சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும், அதேவேளை இந்த சாக்லெட்டுக்களை யார் வாங்கியிருந்தாலும் சாப்பிடாமல் வாங்கிய இடத்திலே ஒப்படைத்து மீண்டும் பணம் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent News