Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsலொறியில் 6 மணி நேரம் பயணம்..!வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி..!

லொறியில் 6 மணி நேரம் பயணம்..!வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லொறியில் பயணம் செய்யும் வீடியோவினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது.

அது மட்டுமன்றி டிரைவர்களுக்கு மத்தியில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, லொறியில் பயணம் செய்தல், டிரைவர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ்ஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் திங்கட்கிழமை லொறியில் பயணம் செய்துள்ளார்.

ஏனெனில், டிரைவர்களின் மனதில் உள்ள குறைகளை நேரில் சந்தித்து தெரிந்துக் கொள்ளும் நோக்கில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை 6 மணி நேரம் லொறியில் பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் பயணம் செய்தல், டிரைவர்களுடன் உரையாடுவது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News