Thursday, January 23, 2025
HomeLatest Newsஓமானில் இருந்து உடனடியாக அழைத்துவரப்படும் 59 இலங்கை பெண்கள் - ஜனாதிபதி அனுமதி

ஓமானில் இருந்து உடனடியாக அழைத்துவரப்படும் 59 இலங்கை பெண்கள் – ஜனாதிபதி அனுமதி

ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மனித கடத்தல்களில் சிக்கிய பெண்கள் தொடர்பிலும் எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளது.

Recent News