Thursday, January 23, 2025
HomeLatest Newsஅடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்...!

அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்…!

லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன்.

இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன் அரசியலில் முக்கிய சக்தியாகவே இருந்துள்ளார். லண்டன் மேயராக இருந்த போது, மிகச் சிறப்பாக செயல்பட்டதாலே இவரால் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வர முடிந்தது.

பிரிட்டன் பிரதமராகும் முன்பு 2016 முதஸ் 2018 வரை அவர் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இருப்பினும், பிரதமரான பிறகே அவர் உலகெங்கும் அறியப்படும் தலைவர் ஆனார். வித்தியாசமான ஹேர்ஸ்டைல், படபடவென பேச்சும் ஸ்டைல் உள்ளிட்டவற்றால் எப்போதும் லைம்லேட்டிலேயே இருந்தார். அதேநேரம் எப்போதும் நல்ல விஷயங்களுக்காகவே அவர் லைம்லேட்டில் இருந்தார் எனச் சொல்லிவிட முடியாது.

பிரதமராக இருந்த சமயத்திலேயே அவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கினார். உச்சபட்சமாக கொரோனா காலத்தில் பிரிட்டன் மகாராணி தொடங்கி அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்க இவர் மட்டும் கூலாக தனது சகாக்குளுக்கு பார்டி கொடுத்தார். இது மிக பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்க வேறு வழியில்லாமல் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

குழந்தை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் தான் கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இப்போது மூன்றாவது குழந்தையை இவர்கள் வரவேற்க ரெடியாக உள்ளனர். குழந்தை இன்னும் சில வாரங்களில் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மற்ற இரு குழந்தைகளுடன் நடந்து செல்லும் படத்தைப் பதிவிட்டுள்ள அவர், “ஒரு சில வாரங்களில் எங்கள் குடும்பத்திற்கு புதிய உறுப்பினர் வரப் போகிறார்.. கடந்த 8 மாதங்களாக நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். ஆனால் இப்போது புதிய உறுப்பினரை வரவேற்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன். தனது உடன் பிறப்பை வரவேற்க இருவரும் தயாராக உள்ளனர். புது உறுப்பினரைக் குறித்துப் பேசுவதை இருவரும் நிறுத்துவதே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன் சமீபத்தில் 3.8 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 40 கோடி) மதிப்புள்ள ஒன்பது படுக்கையறைகள் கொண்ட மாளிகையை வாங்கியதாகத் தகவல் வெளியான நிலையில், இப்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021இல் தந்தையாவது குறித்துப் பேசிய அவர், “தந்தையாக இருப்பது கடினமான வேலை தான். ஆனால், எனக்கு அது ரொம்பவே பிடித்து இருக்கிறது” என்றார்.

நெட்டிசன்கள் பலரும் போரிஸ் ஜான்சன் தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.

Recent News