Wednesday, December 25, 2024
HomeLatest Newsபிரித்தானியா நோக்கி பயணமான 54 அகதிகள்...!சுற்றி வளைத்த கடற்படையினர்...!

பிரித்தானியா நோக்கி பயணமான 54 அகதிகள்…!சுற்றி வளைத்த கடற்படையினர்…!

மீன்பிடி படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி பயணித்த 54 அகதிகளை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பாது கலே நகரில் port de Dunkerque துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அகதிகளை ஏற்றிக் கொண்டு பிரித்தானியா நோக்கி சிறிய மின்பிடி படகு ஒன்று பயணித்துள்ளது.

மொத்தமாக 54 பேர் இருந்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களை ஏற்றிச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

படகில் பயணித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News