Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia News54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்து 8 வயது சிறுவன் சாதனை..!

54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்து 8 வயது சிறுவன் சாதனை..!

சிறுவன் ஒருவன் 54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளமை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

சென்னையை சேர்ந்த விராஜ் ஆருஷ் ரெட்டி என்ற 8 வயது சிறுவனே இந்த சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.

சிறு வயது முதலே நீச்சல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளமையால் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் தூண்டுதலினால் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டிலுள்ள நேரு உள்ளரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் எந்த விதமான உதவிகளும் இன்றி குறித்த சாகசத்தினை மேற்கொண்டுள்ளார்.

அங்கு 54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்துள்ளதுடன் நோவா உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

Recent News