Friday, November 15, 2024
HomeLatest Newsகுழந்தைகளை தத்தெடுக்க காத்திருக்கும் 5000 இலங்கையர்கள்!

குழந்தைகளை தத்தெடுக்க காத்திருக்கும் 5000 இலங்கையர்கள்!

குழந்தைகளை தத்தெடுப்பதற்காக 5 ஆயிரம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 வருடங்களுக்கு மேல் இவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக திணைக்களத்தின் மூத்த அதிகாரி நிர்மலி பெரேரா தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் இந்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேல் மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை குழந்தைகளை தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் கிடைத்துள்ள விண்ணப்பங்களுக்கு அமைய குழந்தைகளை வழங்க முடியாது. தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.

திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அல்லது குழந்தைகள் பிறந்த பின்னர் பிள்ளைகள் வளர்க்க முடியாத பெற்றோர் குழந்தைகளை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்க முடியும்.

இதனால், குழந்தைகள் பிறந்த பின்னர், அவற்றை வளர்க்க முடியாதவர்கள், பிள்ளைகளை கொன்று விட வேண்டாம் எனவும் நிர்மலி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent News