உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தொழில்நுட்ப பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகில் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது.
அத்துடன், மார்ச் மாதம் மேலும் 9 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி மந்த கதியை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 500 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும் பணிநீக்க செயல்முறை தொடரும் என்றும், வலைதள சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.