Friday, November 15, 2024
HomeLatest Newsபராக் ஓபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை - அதிரடி உத்தரவு...

பராக் ஓபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை – அதிரடி உத்தரவு …!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிரச்சனை முற்றியதால் ரஷ்யா வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலை ஆக்ரோஷமாக தொடர்ந்தமையால் உக்ரைன் இராணுவமும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

ரஷ்யாவின் தாக்குதலில் அப்பாவிகளும், உக்ரைன் இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். அதேபோல் உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த போருக்கு பல நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் போரை கைவிடுமாறு கேட்டு கொண்ட போதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவிசாய்க்கவில்லை.

இதனால் அந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததை தொடர்ந்து ரஷ்யா, தீவிரமாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகின்றது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன், அமெரிக்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு வழங்குவதுடன், போருக்கு தேவையான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.

இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகின்றது. மேலும் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யா எச்சரித்தும் வருகின்றது.

இந்நிலையில், ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா, முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்மேன் அமெரிக்க சபையின் அடுத்த தலைவர் என எதிர்பார்க்கப்படும் சார்லஸ் க்யூ ப்ரோன், அமெரிக்க செனட்டர்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recent News