Saturday, January 25, 2025
HomeLatest News500 நாட்கள் குகைக்குள் தனியாக வாழ்ந்த சிங்கப் பெண்..!

500 நாட்கள் குகைக்குள் தனியாக வாழ்ந்த சிங்கப் பெண்..!

பெண் ஒருவர் மனிதர்களுடன் எந்த விதமான தொடர்புமின்றி 500 நாட்கள் குகைக்குள் தனியாக வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த விளையாட்டாளரான பீட்ரிஸ் பிலாமினி என்ற பெண்ணே இவ்வாறு குகைக்குள் தனியாக வாழ்கை நடத்தியுள்ளார்.

பீட்ரிஸ் பிலாமினி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கிரானடாவில் உள்ள ஒரு குகைக்கு சென்று வாழ்ந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளி உலகிற்கு அடியெடுத்து வைத்துள்ளார்.

தற்பொழுது 50 வயதாகும் அவர் உலகில் கொவிட்-19 சூழல் மோசமடைந்த காலத்தில் ர‌ஷ்யா உக்ரைன் மீது படையெடுக்காத போது தனது 48 வயதில் குகைக்குள் சென்றுள்ளார்.

சோதனை முயற்சியின் நிமித்தம் குகைக்குள் அனுப்பப்பட்ட பிலாமினியின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் நெருக்கமாகக் கவனித்தும் வந்துள்ளனர்.

70 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த குகைக்குள் பிலாமினி உடற்பயிற்சி மற்றும் ஓவியம் வரைதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் 60 புத்தகங்களைப் படித்துள்ளதுடன் 1,000 லிட்டர் தண்ணீரை அருந்தியுமுள்ளார்.

குகையை விட்டு வெளியே வந்த பிலாமினி உலகில் நடந்தவை பற்றி தெரியவில்லை எனவும், இந்த அனுபவம் அருமையாக இருந்ததுடன் எதனுடனும் ஒப்பீடு செய்ய முடியாது எனவும் இருப்பினும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Recent News