Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு!

இலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 05 மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறித்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

அந்த குழுவினர் திக்வெல்ல, வெலிகம மற்றும் திருகோணமலை பகுதிகளில் வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீனவர்களின் படகு வேறொரு படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டதாக மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் இது குறித்து கடற்றொழில் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.

Recent News