Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஈரானில் 5 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் - 04 பேர் கட்டிடங்களில் சிக்கி பலி !!!

ஈரானில் 5 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் – 04 பேர் கட்டிடங்களில் சிக்கி பலி !!!

வடகிழக்கு ஈரானில் உள்ள காஷ்மீர் கவுண்டியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது .இந்த அனர்த்தத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி 13:24 மணிக்கு 6 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டது, மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என அந்நாட்டு அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது காயமடைந்தவர்களில், 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ. ஆர்.என். ஏ செவ்வாயன்று கூறியது

பலியானவர்களில் இருவர் கட்டிட முகப்புகளில் இருந்து குப்பைகள் விழுந்து இறந்ததாகவும், மற்ற இருவர் ஜெண்டெஜான் கிராமத்தில் காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தபோது இறந்ததாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த அனர்த்தத்தை அடுத்து மாகாணத்தில் உள்ள அனைத்து சேவை மற்றும் மீட்பு மற்றும் நிவாரண அமைப்புகளும் விழிப்புடன் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Recent News