Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபோலந்து விமான விபத்தில் பரிதாபமாய் பறிபோன 5 உயிர்கள்..!

போலந்து விமான விபத்தில் பரிதாபமாய் பறிபோன 5 உயிர்கள்..!

போலந்தில் கிறைனோ நகரில் அமைந்துள்ள வான் சாகச மையத்தில் செஸ்னா 208 வகையைச் சோ்ந்த விமானமொன்று திங்கள்கிழமை விமானங்களை நிறுத்திவைத்திருப்பதற்கான கூடத்தில் விழுந்து நொறுங்கியதில் அதன் விமானியும், அந்தக் கூடத்தில் இருந்த 4 பேரும் என மொத்தம் 5 போ் உயிரிழந்தனா்.


அத்தோடு, இந்த விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவா் உள்ளிட்ட 8 பேரும் அவசரக்கால விமான ஊா்தி மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காயமடைந்தவா்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


விமானம் மூலம் மிக உயரத்திலிருந்து குதித்து, கடைசியில் பாராசூட் மூலம் தரையிறங்கும் சாகச நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளா்கள் பங்கேற்பதற்காக, இது போன்ற சாகச மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Recent News