Friday, January 24, 2025
HomeLatest Newsசூடானில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகளுட்பட பலர் பலி....!

சூடானில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகளுட்பட பலர் பலி….!

ஆபிரிக்கா நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்குமிடையே பெரும் போர் மூண்டுள்ளது.

இதனால் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர். இந் நிலையில் சூடானில் நடாத்தப்பட்ட.வான் வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்ளடங்கலாக 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத் தாக்குதலானது சூடான் இராணுவத்திற்கும் பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்குமிடையிலான வான்வழித் தாக்குதல் சண்டையிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத் தாக்குதலில் 25 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் இறந்தவர்களில் 5 குழந்தைகளுட்பட பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவரென அந் நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Recent News