Wednesday, December 25, 2024
HomeLatest Newsமனிதர்களைக் கொல்லக்கூடிய 5 அழகிய மிருகங்கள்

மனிதர்களைக் கொல்லக்கூடிய 5 அழகிய மிருகங்கள்

அழகு உள்ள இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்ற பழமொழியினை கேள்விப்பட்டிருப்போம்.அதற்கமைய மிகவும் அழகு வாய்ந்த அதேசமயத்தில் மனிதர்களுக்கு ஆபத்தினை உண்டாக்கும் ஐந்து உயிரினங்கள் பற்றி பாப்போம்.

1.Leopard Seal

நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய இந்த உயிரினத்தை அந்தாட்டிக்கா போன்ற பனி உள்ள பிரதேசங்களில் அதிகளவில் காண முடியும் . இந்த உயிரினத்தின் முகம் புன்னகையுடன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடக்கூடியது.

ஆனால் இது ஆபத்தான மாமிச உண்ணியாகும்.மீன்கள்,பென்குயின்கள் என தொடங்கி கடல் உயிரினங்கள் வரை வேட்டையாடி உண்ணக்கூடியது.

அண்மையில் ஆராச்சியாளர் ஒருவரை கடலின் 200 அடி ஆழத்திற்கு இழுத்து சென்று உயிரைப்பறித்தமை குறிப்பிடத்தக்கது.

2.Poison Dart Frog

சிவப்பு,மஞ்சள்,நீலம் போன்ற பல வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த தவளைகள் அமேசன் காடுகளில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த தவளைகள் மற்ற நாடுகளில் வாழும் தவளைகளை விட பார்ப்பதற்கு மிகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் அதேவேளை பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

வெறும் 2சென்றிமீற்றர் வரை வளரக்கூடிய இந்த தவளைகளின் இருந்து எடுக்கக்கூடிய விஷம் ஒரே நேரத்தில் 10 மனிதர்களைக் கொல்லக்கூடிய அளவிற்கு ஆபத்தானது.

இந்த தவளைகள் செல்லும் இடங்களில் செல்லும் உயிரினங்கள் இதன் விஷங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

3.Puffer Fish

Inflated smooth puffer fish caught in mangroves on the western coast of FloridaOthers you may like:

உருளை வடிவில் காணப்படும் இந்த மீன்களை வீடுகளில் உள்ள மீன் தொட்டிகளில் பலரும் வளர்த்து வருகின்றனர்.

ஆனால் அதே அளவிற்கு மனிதர்களை நொடிப்பொழுதில் கொல்லும் அளவிற்கு ஆபத்தானதாக உள்ளது.இந்த மீன்களை ஜப்பானில் உள்ள உணவகங்களில் பிரபலமான உணவுகளை தரரிக்கின்றார்கள்.

உணவினை தயாரிக்கும் போது கல்லீரலை அகற்றுவதில் சிறிது தவறு ஏற்படுமாக இருந்தால் அந்த உணவுகளை உண்பவர்களுக்கு அதுவே கடைசி உணவாகும்.ஏனெனில் அதன் கல்லீரலில் கொடிய விஷம் உள்ளது.

இதனால் ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் 5 பேர் என உயிரினை விடுகிறார்கள்.

4.Dogs

மனிதர்களுடன் இலகுவாக பழக்கூடிய எல்லோரும் விரும்பக்கூடிய செல்லப்பிராணி.இருப்பினும் இது அனைவருடனும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

குறிப்பாக இந்த விலங்குகள் வளர்த்தவர்களிடமே அன்பாக பழக்கக்கூடியது.முன்,பின் தெரியாதவர்களாக இருந்தால் சற்றும் யோசிக்காமல் உடனே தாக்கும் தன்மையினை கொண்டது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ராவிஸ் நோயினால் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.அதில் பெரும்பாலான இறப்பிற்கு காரணம் நாய்க்கடி தான்.

எனவே இதனால் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விலங்குகளில் இதுவுமொன்றாகும்.

5.Slow Loris

மிகச்சிறிய அளவிலான தோற்றத்தில் இருக்கும் இந்த விலங்குகளை இந்தியா,சீனா,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மட்டுமே காணமுடியும்.

இந்த விலங்குகள் நாயை போன்று மிகவும் இலகுவாக மனிதர்களுடன் பழக்கக்கூடியது.அதே சமயத்தில் இடையூறு விளைவித்தால் உடனே கடித்துவிடக்கூடிய தன்மை உடையது.

இது கடிப்பதில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவெனில் இந்த உயிரினம் தான் உலகில் அதிக விஷத்தன்மை கொண்ட பாலூட்டியாகும் .இதன் விஷம் வளர்ந்த நாக பாம்பிற்கு சமமாகும்.

இதன் விஷம் அதன் முன்னம் காலில் உள்ள மூட்டுப்பகுதியில் தான் உற்பத்தி செய்யபப்டுகிறது .இதன் அழகிற்காக பலரும் சட்டவிரோதமாக வளர்த்து வருகின்றார்கள்.

Recent News