Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld News47 உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு – ரஷியா தகவல்..!

47 உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு – ரஷியா தகவல்..!

தங்களது தெற்குப் பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அதிகபட்சமாக ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.

இது தவிர,வொல்கரோடில் 3 ட்ரோன்கள்,கா்ஸ்கில் 2 ட்ரோன்கள்,பெல்கராட் பகுதியில் ஒரு ட்ரோன் என 6 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களை ஆக்கிரமித்தது. மேலும்,உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்திவருகிறது.

Recent News