Thursday, January 23, 2025
HomeLatest Newsஹைய்தி நாட்டில் கனமழையால் 42 பேர் பலி..!ஐ.நா தகவல்..!

ஹைய்தி நாட்டில் கனமழையால் 42 பேர் பலி..!ஐ.நா தகவல்..!

ஹைய்தி நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரைக்கும் 42 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அனர்தத்திற்கு முன்னதாகவே இந்த நாடு வன்முறை, அரசியல் சரிவு மற்றும் பொருளாதார தேக்கம் போன்ற மனிதநேயம் சார் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது.

இவ்வாறான சுழலில், நாட்டின் தலைநகரை சூழவுள்ள நகரங்களில் திடீரென பெய்த தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் மாயமாகியுள்ளனர்.
முழுவதுமாக 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13,400 பேர் வீடுகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் பகுதியிலிருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள லியோகனே நகரம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் தேசிய அவசரக்கால பேரிடர் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்ரி உத்தரவிட்டுள்ளார் என்றும் ஐ.நா வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

Recent News