Tuesday, March 11, 2025
HomeLatest Newsவிசேட பொது மன்னிப்பின் கீழ் 417 கைதிகளுக்கு விடுதலை!

விசேட பொது மன்னிப்பின் கீழ் 417 கைதிகளுக்கு விடுதலை!

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

நேற்று கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமது கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

Recent News