Thursday, January 23, 2025
HomeLatest News400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை!

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை!

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டத்தில் தொழிலாளர் அமைச்சின் செலவீனங்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Recent News