Thursday, January 23, 2025
HomeLatest NewsT20 அரை இறுதிக்கான 4 அணிகளும் உறுதி!

T20 அரை இறுதிக்கான 4 அணிகளும் உறுதி!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு 4வது அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. அதற்கமைய, அரையிறுதி மோதவுள்ள நான்கு அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தென் ஆபிரிக்க அணி நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததையடுத்து, அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணியின் வெளியேற்றம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதற்கமைய, குழு1ல் இருந்து நியூசிலாந்தும் இங்கிலாந்தும், குழு 2இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியின் இறுதி அட்டவணையை இந்தியா – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு தீர்மானிக்கும்.

பிற செய்திகள்

Recent News