Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டை விட்டு தப்பிப்பிழைக்க முனைந்த 351 பேர்

நாட்டை விட்டு தப்பிப்பிழைக்க முனைந்த 351 பேர்

நாட்டில் கடந்த மே மாதத்தில் மாத்திரம் சட்டவிரோதமாக படகு மூலம் வௌிநாடு செல்ல முயன்ற 351 பேரை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் இதன் போது 08 படகுககள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் வௌிநாடுகளுக்கு பயணிக்க முற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் இலங்கையில் வர்த்தகமாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கிலேயே சட்டவிரோதமாக படகுககளில் பயணிக்க முயற்சிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Recent News