Monday, January 27, 2025
HomeLatest NewsIndia Newsசூடானில் சிக்கி தவிக்கும் 3,500 இந்தியர்கள்..!

சூடானில் சிக்கி தவிக்கும் 3,500 இந்தியர்கள்..!

சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சூடானில் 3,500 ற்கும் அதிகமான மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தெரிவித்துள்ளார்.

சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு உடனுக்குடன்
பரிமாறப்படுகின்றது.

பல்வேறு இடையூறுகளிற்கு மத்தியில் இந்தியர்களை தொடர்பு கொள்ள தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 3,500 இந்தியர்களில், இதுவரை 1,100 பேர் தாயகம் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தாயகம் திரும்பிய இந்தியர்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recent News