Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 34 பேர் பலி..!பாகிஸ்தானில் சோகம்..!

வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 34 பேர் பலி..!பாகிஸ்தானில் சோகம்..!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. அந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்பொழுது வரை குழந்தைகள மற்றும் பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 அதிகமான மக்களை பேரிடர் குழுவினர் மீட்டு சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்துள்ளனர்.

பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியமையால் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News