Tuesday, December 24, 2024
HomeLatest News303 இலங்கையர்களுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் புலம் பெயர்ந்தோர் அமைப்பு!

303 இலங்கையர்களுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் புலம் பெயர்ந்தோர் அமைப்பு!

வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால் அதற்கான உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் வைத்து 303 இலங்கையர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Recent News