Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கனமழை 300 போ் உயிரிழப்பு!!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கனமழை 300 போ் உயிரிழப்பு!!!

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்.

பாக்லான் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அந்த மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது என்று தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளப் பெருக்கில் உயிா்பிழைத்தவா்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்ததாக ஐ.நா.வின் உலக உணவு அமைப்பு தெரிவித்தது.

Recent News