பெருந்தோட்ட காரியாலயங்களில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களின் சம்பளம் 30 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்தருனர் ஒன்றியம் என்பனவற்றுக்கு இடையில் இது குறித்த கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும், மிகுதி 5 வீதம் 2024ம் ஆண்டில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள் 70 வீத சம்பள அதிகரிப்பு கோரியிருந்த போதிலும், 30 வீத அதிகரிப்பிற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.