Thursday, December 26, 2024
HomeLatest Newsகென்யாவில் பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 30 பேர் பலி!

கென்யாவில் பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 30 பேர் பலி!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் கிழக்கு பகுதியிலுள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமாக காணப்படும் மொம்பாசாவில் பஸ்ஸொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஞாயிறு 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குறித்த பஸ் பயணம் மேற் கொண்ட நிலையில் மெரு நைரோபி நெடுஞ்சாலையி லுள்ள ஆற்றுப் பாலம் மீது சென்று கொண்டிருந்த போதே திடீரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந் ததாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர் . மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெரு மாவட்ட ஆணையர் நோர்பர்ட் கொமோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

இந்நிலையில், காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் , காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

Recent News