Friday, November 15, 2024

தாய்வான் எல்லையில் பறந்த 30 சீன விமானங்கள்…!தொடரும் பதற்றம்..!

சீனா போர் விமானங்களையும், கப்பல்களையும் தாய்வான் எல்லையில், நிறுத்தி வைத்தமையால் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.

சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தாய்வான் தனி குடியரசு நாடாக பிரிந்தமையால் சீனா, அதனை ஏற்க மறுத்து அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றது.

அதனால் சீனா, இடையிடையே தாய்வானை நோக்கி போர் விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி மிரட்டி வருகின்றது.

இவ்வாறான சூழலில், சீன இராணுவம் செவ்வாய்கிழமை அதிகாலை 6 மணி தொடக்கம் புதன் கிழமை அதிகாலை 6 மணி வரை தாய்வானை சுற்றி 38 போர் விமானங்களையும், 9 கப்பற்படை கப்பல்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

அத்துடன் புதன் கிழமை காலை தொடக்கம் மதியம் வரை 30 விமானங்களை அந்நாட்டின், எல்லையில் சீனா பறக்க விட்டமையால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos