Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsபெற்றோரின் உடலுடன் 3 நாட்கள்...!பிறந்து 6 நாட்களேயான குழந்தை உயிர் தப்பிய அதிசயம்...!

பெற்றோரின் உடலுடன் 3 நாட்கள்…!பிறந்து 6 நாட்களேயான குழந்தை உயிர் தப்பிய அதிசயம்…!

இறந்த பெற்றோரின் உடலிற்கு நடுவிலே 3 நாட்களாக பிறந்து 6 நாட்களேயான குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேஹ்ராடூனில் மூடியுள்ள வீடு ஒன்றிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் அந்த வீட்டிற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

பின்னர் பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற வேளை வீட்டிற்குள் 25 வயது மதிக்கத்தக்க ஆணும், 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இறந்த நிலையில் கிடக்க அவர்களுக்கு இடையே பிறந்து 6 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் உயிரோடு இருந்துள்ளது.

அதையடுத்து பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த தம்பதி 3 நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிறந்த 6 நாள்களேயான அந்த குழந்தை உணவோ, தண்ணீரோ எதுவுமின்றி இரண்டு உடல்களிற்கு இடையே மூன்று நாள்களாக உயிரோடு இருப்பது பொலிஸாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதையடுத்து, குழந்தையை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சையளித்து வருகின்றனர்.

தம்பதிகள் இருவருக்கும் கடந்த ஆண்டே திருமணம் இடம்பெற்றதாகவும், கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recent News