Thursday, March 13, 2025
HomeLatest Newsமியன்மாரில் தொடர்ந்து 3 தடவைகள் பதிவான நிலநடுக்கம்...!வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்...!

மியன்மாரில் தொடர்ந்து 3 தடவைகள் பதிவான நிலநடுக்கம்…!வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்…!

மியான்மரின் யான்கூனில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அந்த வகையில், நேற்றைய தினம் இரவு 11.56 மணிக்கு யான்கூனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

அதையடுத்து, இன்றைய தினம் அதிகாலை 2.52 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளதுடன், அது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

பின்னர், மூன்றாவது தடவையாக இன்று காலை 5.43 மணிக்கு உண்டான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதுடன், 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இவ்வாறாக மியான்மரின் யான்கூனில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு முழுவதும் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Recent News