Tuesday, December 24, 2024
HomeLatest News3 ஆம் சார்லஸ் முடிசூட்டு விழா- வெளியிடப்படவுள்ள புதிய நாணயங்கள்!

3 ஆம் சார்லஸ் முடிசூட்டு விழா- வெளியிடப்படவுள்ள புதிய நாணயங்கள்!

மன்னர் 3 ஆம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராணி 2 ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக இடம்பெறவில்லை.

இந்த நிலையில் மன்னர் 3 ஆம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவினை குறிக்கும் வகையில் 50 பென்ஸ் மற்றும் 5 பவுண்டுகள் உள்ளிட்ட நாணயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

டியூடர் கிரீடத்தை அணிந்தபடி மன்னர் 3 ஆம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட இந்த நாணயங்களை பிரிட்டனை சேர்ந்த சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

மன்னர் 3 ஆம் சார்லஸ் கீரிடம் அணிந்தபடி உருவாக்கப்பட்டுள்ள இந்த நாணயங்கள் இம் மாதம் திகதி புழக்கத்திற்கு விடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News