Wednesday, December 25, 2024
HomeLatest News27 வயதாகியும் ஒரு காதலி கூட இல்லை - ஸ்பீக்கரில் கத்தி புத்தரிடம் வேண்டிய வாலிபரால்...

27 வயதாகியும் ஒரு காதலி கூட இல்லை – ஸ்பீக்கரில் கத்தி புத்தரிடம் வேண்டிய வாலிபரால் பரபரப்பு..!

இளைஞர் ஒருவர் ஸ்பீக்கர் மூலம் கத்தி தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட்டும் , 11 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்றும் புத்தரிடம் வேண்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த 27 வயதான ஜாங் என்ற இளைஞரே 71 மீட்டர் உயரம் கொண்ட புத்தரிடம் ர் ஸ்பீக்கர் மூலம் கத்தி வேண்டுதல் மேற்கொண்டுள்ளார். சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சிசுவான் மாகாணத்தில் டாங் அரசர்களால் கட்டப்பட்ட 71 மீட்டர் உயரமுடைய புத்தர் சிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், ஜாங் தனது வீட்டிலிருந்து 2000 கி.மீ. தொலைவிலுள்ள அந்த புத்தர் சிலை அமைந்துள்ள சிசுவான் மாகாணத்திற்கு ஏர்பாட் ஷேப்பில் உள்ள ஒரு ஸ்பீக்கரை ஆன்லைனில் புத்தரின் நிறத்திலே வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

அங்கு ஜாங், ஸ்பீக்கரில் எனக்கு 27 வயதாவதாகவும் சொந்த காரோ கூட ஒரு வீடோ இல்லை எனவும் கூறியதுடன் இந்த வயதில் கூட எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இல்லை ஆகையால் நான் பணக்காரனாக மாற வெறும் 10 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 11.81 கோடி) பணம் வேண்டும் எனவும் கத்தியுள்ளார்.

தொடர்ந்தும் எனக்கு வரப்போகும் காதலி இளம் பயத்தோடும், அழகாக இருக்க வேண்டும் என்பதுடன் அளவுக்கு அதிகமாக காதலிக்க வேண்டும். என் 10 மில்லியன் யென்னை விட என்னைதான் அவர் அதிகமாக காதலிக்க வேண்டும். என் காதலி இளம் வயதினராக இருத்தல் வேண்டும் எனவும் கத்தி வேண்டிக் கொண்டுள்ளார்.

குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், ஸ்பீக்கர் வாங்கிய நீங்கள், புத்தருக்கு இயர் போனும் வாங்கினீர்களா? எனவும் உங்களது ஆசைகள் புத்தருக்கு கேட்டதா? எனவும் நக்கல் அடித்து வருகின்றனர்.

Recent News