Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsவடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் !!!

வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் !!!

வடகொரியாவில் (North Korea) இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:
அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பாடசாலைக்கு சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள். ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விடயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான்.

அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா (South Korea) அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர்கள் கன்னிப்பெண்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.கடுமையான சோதனைக்குப் பிறகு, வட கொரியா முழுவதிலும் இருந்து ஒரு சில பெண்கள் மட்டுமே பியாங்யாங்கிற்கு அனுப்பப்படுகிறார்கள், அங்கு சர்வாதிகாரியின் ஆசைகளை பூர்த்தி செய்வதே அவர்களின் ஒரே நோக்கம்.

இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும். 3-வது குழு சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும்.இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள். மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் கீழ்நிலை ஜெனரல்கள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த நியமிக்கப்படுகிறார்கள்.இந்தக் குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.“இன்ப அணிக்காக” இரண்டு முறை தான் தேடப்பட்டதாகவும் ஆனால் அவரது குடும்ப நிலை காரணமாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News