Wednesday, December 25, 2024
HomeLatest Newsமலையகத்தில் மழை காரணமாக 25 குடும்பங்கள் இடம்பெயர்வு!

மலையகத்தில் மழை காரணமாக 25 குடும்பங்கள் இடம்பெயர்வு!

மலையக பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் கடுமையான மழை பெய்துவருகிறது . இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக குறித்த பகுதியில் 21 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

வீட்டிற்கு அருகில் உள்ள கலபொட ஆற்றிற்கு நீர் வழங்கும் ஐட்றி ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Recent News