Tuesday, December 24, 2024
HomeLatest News240 கோடி பேர் நாள்தோறும் பட்டினி கிடக்கின்றனர்..!ஐ.நா.அதிர்ச்சி தகவல்..!

240 கோடி பேர் நாள்தோறும் பட்டினி கிடக்கின்றனர்..!ஐ.நா.அதிர்ச்சி தகவல்..!

பசியால் வாடுவோரின் எண்ணிக்கை முன்னரை விட தற்பொழுது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்பொழுது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. .

அத்துடன், உலக மக்கள் தொகையில் 30 சதவீதமானோர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News