தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கனமழையின் காரணமாக குவாங்டாங் மாகாணத்தின் மெய்சூ நகரம் மற்றும் அதையொட்டிய கிராமங்களும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சாலையில் ஓடிய மழைநீரால் மெய்சூ நகருக்கும் டபு கவுன்ட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.அப்போது சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் அதற்குள் கவிழ்ந்து விழுந்தன. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததோடு சுமார் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.