பாகிஸ்தான், சீனா இரண்டு எல்லைகளிலும் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளில் முக்கியமான மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு காலம் சீனாவுடன் லடாக் பிரதேசத்தில் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது தாக்குதல்கள் மாத்திரமே முன்னுரிமை கொடுத்து நிறுவப்பட்டு இருந்தன.
இதில், குறிப்பாக ஏவுகணைகள், தாங்கிகள் பீரங்கிகள் போன்ற தாக்குதல் கருவிகளும் போர் விமானங்களும் முன்னுரிமை பெற்று இருந்தன. ஆனால் தற்போது சீனா இந்தியா படைகள், ஒன்றுபட்டு பின் வாங்குவதற்கு உடன்பட்டு உள்ளன.
இதற்கு இணங்க சீன எல்லையில் படைகள் உடனடி தாக்குதலுக்கு ஏற்ற விதத்தில் இல்லை என்பதால் துரித தாக்குதல் கருவிகளின் முக்கியத்துவம் சற்று குறைவடைந்துள்ளது.
ஆனால் வேறு நாடுகளைப் போல சீனாவை நம்பி ஆயுதங்களை பின்வாங்க முடியாது என்பதோடு, சீனாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தால் மாத்திரமே இந்திய ராணுவத்தால் வினைத்திறனுடன் எல்லைகளை பாதுகாக்க முடியும். குறிப்பாக சீன ராணுவம் போர் முறையில் மாத்திரம் அன்றி அடிப்படை கட்டுமானங்கள், சிறுசிறு ஊடுருவல் முயற்சிகள் மூலம் தந்திரமாக எல்லைகளை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து வரும் இயல்பைக் கொண்டது.
எனவே இவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் எல்லையில் தாக்குதலுக்கு மேலதிகமாக கண்காணிப்பு மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் நேரத்துக்கு தகுந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு, படையில் புதிய புரட்சி ஒன்றை கொண்டு வருகிறது இந்திய ராணுவம். முதல் முறையாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் சேவையில் இணைக்கப்பட உள்ளன. இவற்றைப் பற்றி விரிவாக ஆய்வில் பார்க்கலாம்.
சீனாவில் மீண்டும் ஸி ஜின்பிங் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சீனாவின் எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துவது இந்தியாவிற்கு முதல் முக்கியமான விடயமாக உள்ளது. இதற்காக வடக்கு எல்லைப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அவசரகால பாதுகாப்பு கொள்வனவு அனுமதிகளின் கீழ் drone கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி, Lt Gen VK சதுர்வேதி குறிப்பிடும் போது, drone கள் உளவு நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அன்றி, சிறிய தாக்குதல் நடவடிக்கைகளையும் இலகுவாக மேற்கொள்ள கூடியவை. அத்தோடு ஏனைய விமானங்கள் ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது drone கள் மிகவும் துல்லியமாக இலக்கின் மிக அருகே சென்று செயல்படக் கூடியவை என்பதால் இவற்றை கொண்டு எதிரிகளை தாக்குவது இந்தியாவிற்கு மிக இலகுவாக இருக்கும் என கூறியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி இந்தியாவின் அவசர கால ஆயுத தேவைகளுக்கான கொள்வனவு அனுமதிகள் இன் கீழ் 750 ட்ரொன்களை விசேட படைப் பிரிவுகளுக்கு கொள்வனவு செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த droneகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் பரா படைகள் என அழைக்கப்படும் பரசூட் படைகள், எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய தேவையில் உள்ளதால், இவர்களிற்கு எதிரி எல்லைக்குள் நுழையக் கூடிய ஆளில்லா ரிமோட் control drone கள் தேவைப்படுகின்றன. கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ள RPAV வகை drone கள், இரவிலும் பகலிலும் செயற்படக்கூடியனவாக உள்ளதோடு, இவை எதிரி இலக்குகளின் 3d படங்களை காட்சிப்படுத்த கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் எதிரிகளின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என இராணுவத்தின் விசேட பிரிவு குறிப்பிடுகிறது.
இதற்கு முன் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி, 80 சிறிய ரிமோட் கண்ட்ரோல் ஆல் இயக்கப்படும் ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 15 கிலோமீட்டர் எல்லை வரையில் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவை. இந்த ட்ரோன்கள் குறிப்பாக எதிரிகளின் ஆயுத தொகுதிகளை இனங்கண்டு துல்லியமான தகவலை வழங்கக் கூடியவை. அவற்றின் செயல் திறனை ஆராய்ந்து அதன்பின் மேலதிகமான drone களைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இமாலய மலைத் தொடர்களில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பு களை செய்து நேரடியாக இந்திய ராணுவத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரம் தகவல் வழங்கிக் கொண்டிருக்க கூடிய வகையில் ஆயிரம் இந்திய தயாரிப்பு உளவு காப்டர்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கும் தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தோடு புதிதாக 363 drone கள் கொள்வனவு செய்யப்படுவதற்கான முதற்கட்ட ஏல அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. கொள்வனவு செய்யப்பட உள்ள ட்ரோன்களில் 163 அதிஉயர் பிரதேசங்களிலும் மீதி 200 சாதாரண தரைப் பிரதேசங்களிலும் சேவையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் இந்தியாவின் பாதுகாப்பு காரணமாக அவசர கொள்வனவு திட்ட அனுமதிகள் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்றன.
Drone கள் ஒவ்வொன்றும் 100 கிலோ கிராம் அளவு எடை உடையவையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளதோடு இவை ஒவ்வொன்றும் 20 கிலோகிராம் அளவு எடை காவிச் செல்ல கூடியதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொன்றும் தாக்குதல் எல்லை 10 கிலோ மீட்டருக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் drone களில் 60 வீதம் இந்திய உற்பத்தி உதிரிபாகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ட்ரொன்களின் வடிவமைப்பு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், உதிரிப்பாகங்கள் 50 வீதம் மாத்திரம் இந்திய தயாரிப்பு பாகங்களாக இருந்தால் போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது. விற்பனை ஒப்பந்தங்களை முன்வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் எல்லையில் எதிரிகளின் கட்டுமானங்கள், ஆயுத இணைப்புகள் இராணுவ நடவடிக்கைகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் இந்திய ராணுவம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சுருக்கமாக குறிப்பிடும்போது, drone கள் எல்லைப் பிரதேசம் முழுவதும் நிறுவி இருக்கும் நிலையில், சீனா பாகிஸ்தானின் சிறிய அசைவு கூட இந்தியாவின் கண்களில் இருந்து தப்ப முடியாது என்பது உறுதி.
தென்னிந்திய நடிகர் மற்றும் இயக்குனர் ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தயாராக உள்ள “அண்ணே” திரைப்படத்திற்கான அறிமுக மற்றும் துவக்க நிகழ்வு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இத் திரைப்படமானது இந்திய மற்றும் இலங்கை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பங்களிப்பில் உருவாக உள்ளதுடன் இத்திரைப்படத்திற்கான தயாரிப்பாளராகவும் நடிகர் ஜெய் ஆகாஷ் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது…
அத்துடன், இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் இலங்கையின் முன்னணி தமிழ் சிங்கள நடிகையான சாந்தி பானுஷா நடிக்கவுள்ளார்…
மேலும் உள்ளூர் கலைஞர்கள் நடிகைகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.