Tuesday, December 24, 2024
HomeLatest Newsஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணி நேர மின்வெட்டு! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணி நேர மின்வெட்டு! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்படும்.

சரிபார்க்கப்படாத நடைமுறைகளை எதிர்கொண்டால் முழு தேசிய மின்வட்டமும் வீழ்ச்சியடையக்கூடும்.

மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Recent News