Monday, January 27, 2025
HomeLatest Newsஅவுஸ்ரேலியாவிற்கு படகில் பயணித்த 23 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

அவுஸ்ரேலியாவிற்கு படகில் பயணித்த 23 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

மீன்பிடி படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கையர்கள் 23 பேர் அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ பகுதியில் இருந்து நீர்கொழும்பு மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 23 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை 03.50 மணியளவில் அவுஸ்ரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை நேற்று முன்தினம் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News